குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான பிரட் ஆம்லெட்.., எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு மாலை பொழுது ஸ்னாக்ஸ் தான் இந்த பிரட் ஆம்லெட்.
அந்தவகையில், சுவையான பிரட் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட்- 5
- முட்டை- 3
- வெங்காயம்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
- பச்சைமிளகாய்- 2
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மிளகு- சிறிதளவு
- சாட் மசாலா - சிறிதளவு
செய்முறை
முதலில் தவாவை சூடுபடுத்தி வெண்ணெய் சேர்த்து பிரட்டை சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் முட்டை சேர்த்து நன்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கரைத்து வைத்த முட்டை சேர்த்து அதன்மேல் பிரட்டை வைக்கவும்.
இறுதியாக முட்டையில் ஓரங்களை மடித்து வைத்து அதன்மேல் சாட் மசாலா தூவினால் போதும் சுவையான பிரட் ஆம்லெட் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |