மீதியான பாண் இருக்கா? உடனே பாயாசம் செய்ங்க!
Healthy Food Recipes
Milk
By Kirthiga
பொதுவாகவே பாயாசத்தை பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ? அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பாக இருப்பது இந்த பாயாசம் தான்.
வீட்டில் மீதமான பாண் துண்டுகள் இருகின்றதா? அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீசி விடுகின்றீர்களா? உடனே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சுவையான பாண் பாயாசம் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- பிரட் - 4 துண்டுகள்
-
சர்க்கரை- 2 கப்
-
சேமியா- அரை கப்
-
பால்- ஒரு லிட்டர்
- நெய்- தேவையான அளவு
-
முந்திரி, பாதாம்- அலங்கரிக்க
- கான்பிளவர்- 2 ஸ்பூன்
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகளை சேர்த்து, அதில் மூழ்கும் வரை பால் ஊற்றி ஊறவிட வேண்டும்.
- அதில் கான்பிளவர் மாவை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, சிறிய துண்டுகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சேமியாவை நிறம் மாறும் வரை வறுத்து அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
- கொதி வந்தவுடன் அதில் சர்க்கரை ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் வறுத்த பிரட் உருண்டைகளை சேர்க்க வேண்டும்.
- பால் கொதித்து உருண்டைகள் பாலில் நன்றாக ஊற்றி வந்தால் சுவையான பாயாசம் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US