பிரட் இருந்தால் போதும்.., 15 நிமிடத்தில் மொறுமொறு வடை செய்யலாம்
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், பிரட் வைத்து உடனடியாக மொறுமொறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட்- 4
- அரிசி மாவு- ¼ கப்
- ரவை- 3 ஸ்பூன்
- தயிர்- 1 கப்
- கேரட்- ½ கப்
- பெரிய வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- துருவிய இஞ்சி- ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகளை போட்டு கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின் அதில் அரிசி மாவு, ரவை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்து இதில் தயிர், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.

இதற்கடுத்து மிளகு, சீரகம் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கைகளால் நன்கு பிணைந்துகொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
இறுதியாக கலந்த மாவை வடை போல் தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வடை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |