தமிழகத்தின் அனைத்து தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்
முதல்வரின் திட்டத்திற்கமைய இந்த மாதம் 25 ஆம் திகதிகளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் 1978 பள்ளிகளில் இந்த திட்டமானது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளில் இது நடந்தால், மாணவர்களின் வருகை மற்றுமட் செயல்திறன் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள். ரூ.404 கோடி செலவில் இது நடத்தப்படும். மேலும் இதில் பயனடையவுள்ள ஒர குழந்தைக்கான செலவாக ரூ.12.71 இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 மி.லி காய்கறிகளுடன் சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும். வாரத்தில் இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் தானியங்கள் வைத்து காலை 8 மணி தொடக்கம் 8.50 வரை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமூக நலத்துறையின் மூத்த அதிகாரி, தமிழக மகளிர் மேம்பாட்டு கழகம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாத்திரங்கள் வழங்கு பயிற்சி அளித்துவருவதாகவும், இந்த திட்டத்தை நாக்கபட்டினத்தில் தொடங்குதற்கான ஆயத்தம் நடந்துள்ளதாவும் முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |