அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்தி வாய்ந்த பூகம்பம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலாஸ்கா தீபகற்பத்தின் கரையோரத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக USGS தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 10:15 மணியளவில் மிகவும் வலுவான நிலநடுக்கம் அலாஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 91 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது என USGS தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 பதிவானதாகவும், கடலுக்கு அடியில் 11 மைல் தொலைவில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
Notable quake, preliminary info: M 8.2 - 91 km ESE of Perryville, Alaska https://t.co/DusSgxqIuC
— USGS Earthquakes (@USGS_Quakes) July 29, 2021
அமெரிக்க பசிபிக் பிராந்தியங்களான குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Thu Jul 29 06:23:22 UTC 2021 event picture pic.twitter.com/UQwlRCmRlk
— NWS Tsunami Alerts (@NWS_NTWC) July 29, 2021
அலாஸ்கா தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது, சிறிய சுனாமிகள் காணப்பட்டன என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.