லண்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் வெளியானது: ஹீரோ என புகழும் ஊடகங்கள்
லண்டனில், பள்ளிக்குச் செல்லும் வழியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவளை ஹீரோ என ஊடகங்கள் வர்ணித்துள்ளன
லண்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமி
லண்டனில், பள்ளிக்குச் செல்லும் வழியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் அவளைக் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
mirror
அந்த சிறுமியின் பெயர் Eliyanna Andam என்று தெரியவந்துள்ளது. 15 வயதான அந்தச் சிறுமி, Croydonஇலுள்ள John Whitgift School என்னும் பள்ளியில் படித்துவந்துள்ளாள்.
தடகள வீராங்கனையான Eliyanna சட்டத்தரணியாக ஆக ஆசைப்பட்டதாகவும், அருமையான பெண், அவளுக்கு நல்ல எதிர்காலம் இருந்தது என்றும் அவளை அறிந்த சிலர் கூறியுள்ள நிலையில், எங்கள் பிள்ளை பள்ளிக்குச் சென்றாள், ஆனால், வீடு திரும்பவேயில்லை என்று கூறி கண்ணீர் வடித்துள்ளார் Eliyannaவின் சித்தி.
Image: Getty Images
கொலைக்குக் காரணம் என்ன?
உண்மையில், Eliyannaவுக்கும் அவரைக் கொலை செய்த நபருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. 17 வயது பையன் ஒருவன், Eliyannaவின் தோழியைக் காதலித்துள்ளான். இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டிருக்கிறார்கள். அந்தப் பையன், மீண்டும் தங்கள் காதலை புதுப்பித்துக்கொள்ள விரும்பியிருக்கிறான்.அவளோ அதை ஏற்றுகொள்ள மறுத்திருக்கிறாள்.
Image: Facebook
தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே தான் கொண்டு வந்த கத்தி ஒன்றை எடுத்திருக்கிறான் அவன். அப்போது தன் தோழியைக் காப்பாற்ற Eliyanna குறுக்கே வர, ஆத்திரத்தில் அவளைக் கத்தியால் குத்தியிருக்கிறான் அந்தப் பையன்.
கழுத்திலும் நெஞ்சிலும் கத்தியால் குத்தப்பட்டEliyanna பரிதாபமாக உயிரிழந்துள்ளாள்.
mirror
ஹீரோ என புகழும் ஊடகங்கள்
தன் தோழியைக் காப்பாற்ற உயிரைத் துறந்த Eliyannaவை ஊடகங்கள் ஹீரோ என வர்ணித்துள்ளன.
இதற்கிடையில் Eliyannaவைக் கத்தியால் குத்திய நபரை 75 நிமிடங்களில் மடக்கிப் பிடித்துள்ள பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |