60 பயணிகளுடன் பயணித்த விமானத்துடன் ராணுவ ஹெலிகொப்டர் மோதி பாரிய விபத்து: அமெரிக்காவில் துயர சம்பவம்
அமெரிக்காவில், 60 பயணிகள், 4 விமான பணியாளர்களுடன் பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும், ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றும் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் மீது மோதிய ராணுவ ஹெலிகொப்டர்
Webcam at the Kennedy Center caught an explosion mid-air across the Potomac. https://t.co/v75sxitpH6 pic.twitter.com/HInYdhBYs5
— Alejandro Alvarez (@aletweetsnews) January 30, 2025
நேற்று இரவு 9.00 மணியளவில், கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே ராணுவ ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
DCA search and rescue! pic.twitter.com/xSG9UBJBsQ
— Abadi Ismail 🇱🇧🇸🇦🇵🇸🇸🇾#FreePalestine (@FollowAbadi) January 30, 2025
விமானத்தில் 60 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் இருந்ததாகவும், ராணுவ ஹெலிகொப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மோதிய விமானம், அல்லது விமானமும் ஹெலிகொப்டரும் அருகிலுள்ள Potomac நதியில் விழுந்ததால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
விபத்து ஒரு பக்கம், நதியில் உறையவைக்கும் குளிர் நீர் மறுபுறம் என, நதியில் விழுந்தவர்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது.
நதியிலிருந்து நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு உயிரற்ற உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நதியில் விழுந்தவர்களை மீட்கும் பணி தொடரும் நிலையில், ட்ரம்ப் உட்பட புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களும் அதிகாரிகளும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தாங்கள் அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |