பிரித்தானிய இளவரசியின் கணவர் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன்? நீதிமன்றத்தில் விளக்கம்
பிரித்தானிய இளவரசி ஒருவரின் கணவர் தன் உயிரை தானே மாய்த்துக்கொண்ட நிலையில், எதனால் அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது தொடர்பில் நீதிமன்றத்தில் இளவரசி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இளவரசியின் கணவர் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன்?
மன்னர் சார்லசின் சகோதரி முறை உறவுமுறையினர் லேடி கேப்ரியல்லா என்பவர். கேப்ரியல்லாவின் கணவர் தாமஸ் கிங்ஸ்டன்.
பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி, தனது பெற்றோர் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் தாமஸ். அவரது அருகில் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்ற அதிகாரிகள் விசாரணையில், அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.
தாமஸ் எதனால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, தாமஸின் மனைவி கேப்ரியல்லா அது குறித்து தெரிவித்த விளக்கம் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மைக்காக தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துவந்துள்ளார் தாமஸ்.
அந்த மருந்துகளின் பக்க விளைவே அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ள கேப்ரியல்லா, அந்த மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து அவற்றை எடுத்துக்கொள்பவர்களை எச்சரித்தும் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |