கத்திரிக்கோலால் குத்தப்பட்ட கேரள செவிலியர் எப்படி இருக்கிறார்? சமீபத்திய தகவல்
பிரித்தானியாவில், மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்ததால் பொறுமையிழந்த நோயாளி ஒருவர், செவிலியர் ஒருவரை கத்திரிக்கோல் ஒன்றால் குத்தினார்.
படுகாயமடைந்த அந்த செவிலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரைத் தாக்கிய நோயாளி மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் அந்த செவிலியர்?
தாக்கப்பட்ட செவிலியர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், அவரது பெயர், அச்சம்மா செரியன் (57).
2007ஆம் ஆண்டு முதல், அச்சம்மா, தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கிரேட்டர் மான்செஸ்டரில் வாழ்ந்துவருகிறார், Royal Oldham மருத்துவமனையில் அவர் செவிலியராகப் பணியாற்றிவருகிறார்.
அச்சம்மாவைக் கத்திரிக்கோலால் குத்தியவர், Royton என்னுமிடத்தைச் சேர்ந்த Rumon Haque (37) என்பவர் ஆவார்.
தாக்கப்பட்ட செவிலியர் எப்படி இருக்கிறார்?
கத்திரிக்கோலால் குத்தப்பட்ட அச்சம்மா மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக Royal Oldham மருத்துவமனையின் தலைமை நிர்வாகியான Dr Owen Williams தெரிவித்துள்ளார்.
அவர் காயங்கள் ஆறுவதற்காக தனது வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள Dr Owen Williams, ஒரு நல்ல செய்தி, அது, எங்கள் சக ஊழியரான அச்சம்மா தற்போது வீட்டில் இருக்கிறார் என்பதுதான் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |