நடுவானில் உயிரிழந்த விமானப்பயணி: பொலிஸ் விசாரணை துவக்கம்
ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பயணி ஒருவர் நடுவானில் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
நடுவானில் உயிரிழந்த விமானப்பயணி
செவ்வாயன்று, ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று, பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு பயணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு சிகிச்சையளிக்க முயன்றுள்ளார்.
ஆனாலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
அந்த நோயாளிக்கு என்ன பிரச்சினை, எதனால் அவர் உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
விமான மரணங்கள் அபூர்வமானவை என கூறப்படும் நிலையில், அந்த துயர சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |