பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரத்து செய்த ராணி கமீலா: அரண்மனை வெளியிட்டுள்ளதகவல்
பிரித்தானிய மன்னர் சார்லசுடைய மனைவியான ராணி கமீலா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரண்மனை வெளியிட்டுள்ளதகவல்
ராணி கமீலா, வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதாக இருந்தது.
அத்துடன், பக்கிங்காம் அரண்மனையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களை மன்னர் சார்லஸ் கௌரவிக்கும் ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்வதாக இருந்தது.
ஆனால், அந்த இரண்டு நிகழ்ச்சிகளிலுமே அவர் கலந்துகொள்ளப்போவதில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ராணி கமீலாவுக்கு சுவாசப் பாதையில் தொற்று உருவாகியுள்ளதாகவும், அதனால் ஓய்வெடுக்குமாறு அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளதாகவும் அரண்மனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், ராணி கமீலாவுக்கு என்ன பிரச்சினை, என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |