அடிக்கடி நெட்டி முறிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நம்மில் பலருக்கும் விரல்களில், கழுத்துகளில் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது.
இது உண்மையிலேயே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு தவறான பழக்கமாகும்.
நெட்டி முறிக்கும்போது சொடக்கு சத்தம் கேட்டதும் அது சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தருவதாக உணர்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல என்பதை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சொடக்கு சத்தம் ஏன் கேட்கிறது?
நம் உடல்களில் உள்ள எலும்பு இணைப்புகளுக்கு இடையில் சுரக்கும் சைனோவியல் என்ற திரவம் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க ஒரு எண்ணெய் போல் வேலை செய்கிறது.
நீண்ட நேரம் நாம் அசையாமல் இருக்கும்பொழுது ஒரு சில இடங்களில் இந்த திரவம் சென்று சேர்ந்துவிடும்.
அப்போது நெட்டி முறிப்பதால் எலும்பு இணைப்புகள் விரிவடைவதால் அதனுள் இருக்கும் திரவம் வேகமாக நகரும்பொழுது சொடக்கு சத்தம் கேட்கிறது.
நெட்டி முறிக்கும்பொழுது கேட்கின்ற இந்த சத்தம் தான் பலரையும் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டுகிறது.
நெட்டி முறிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
45 வயதிற்கு மேற்பட்டோர் நெட்டி முறித்தால் அவர்களுக்கு பிடி வலிமையின்றிப் போவது முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
விரல்களில் மீண்டும் மீண்டும் நெட்டி முறிக்கும்பொழுது ஏற்படும் சத்தம் எலும்பு பிரச்னைகளின் அறிகுறியாகும்.
நீண்ட நேரம் விரல்களை நெட்டி முறிப்பது கையின் பிடியின் வலிமையை பாதிப்பதோடு, கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
எப்பொழுதாவது நெட்டி முறிப்பது தவறில்லை. நெட்டி முறிப்பதே பழக்கமாக இருந்தால் மூட்டுவலி ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |