ட்ரம்ப் ஹொட்டல் முன் வெடித்த டெஸ்லா கார்: குறி ட்ரம்புக்கா எலான் மஸ்குக்கா?
புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவிலுள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் மக்கள் கூட்டம் மீது ஒருவர் வேண்டுமென்றே காரை மோதிய பயங்கர சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், ட்ரம்புக்கு சொந்தமான ஹொட்டல் முன் டெஸ்லா கார் ஒன்று வெடித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் ஹொட்டல் முன் வெடித்த டெஸ்லா கார்
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்புக்கு சொந்தமான ஹொட்டல்களில் ஒன்று லாஸ் வேகஸ் நகரில் அமைந்துள்ளது.
நேற்று காலை டெஸ்லா கார் ஒன்று அந்த ஹொட்டல் முன் வந்து நின்றுள்ளது.
சிறிது நேரத்தில், அதாவது, உள்ளூர் நேரப்படி 8.40 மணிக்கு அந்தக் காரிலிருந்த சில பொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
Cybertruck blows up in front of Trump Tower in Las Vegaspic.twitter.com/iGK9IDXWSV
— Paul A. Szypula 🇺🇸 (@Bubblebathgirl) January 1, 2025
அந்தக் காரில் எரிபொருள் நிரப்பட்டப்பட்ட கேன்களும், பெரிய பெரிய பட்டாசுகளும் இருந்துள்ளன.
இந்த வெடிவிபத்தில் அந்தக் காரின் சாரதி உயிரிழந்துள்ளார், ஏழு பேர், பெரும்பாலும் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
குறி ட்ரம்புக்கா எலான் மஸ்குக்கா?
இந்த சம்பவத்துக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரில் மக்கள் கூட்டம் மீது காரைக் கொண்டு ஒருவர் மோதிய சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், ட்ரம்ப் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்க, அவருடைய வெற்றிக்காக டெஸ்லா அதிபரான எலான் மஸ்க் பணத்தை வாரி இறைக்க, டெஸ்லா கார் ஒன்று ட்ரம்புடைய ஹொட்டல் முன் வெடித்துள்ளதால், இந்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |