பிரித்தானியாவில் இனி இதைச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்!
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டத்தின்படி, பாலூட்டும் தாய்மார்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பாலூட்டும் பெண்களின் அனுமதியின்றி பொது இடங்களில் புகைப்படம் எடுப்பது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விரைவில் சட்ட விரோதமாகிவிடும்.
ஜனவரி 4, செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டதிட்டத்தின்படி, பாலூட்டும் தாய்மார்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பவர்களுக்கு இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதி அமைச்சகம், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், காவல்துறை, குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றச் சட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் என்ற புதிய குற்றத்தைச் சேர்த்துள்ளது.
வால்தம்ஸ்டோவின் தொழிற்கட்சி எம்.பி.யான Stella Creasy, வடக்கு லண்டனில் ரயிலில் தனது நான்கு மாத மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது புகைப்படம் எடுக்கப்பட்டதை அடுத்து இந்த புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் விடிங்டனின் தொழிற்கட்சி எம்.பி.யான Jeff Smith-துடன் இணைந்து Creasy, 'Stop the Breast Pest' என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ரயிலில் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் சிரித்துக்கொண்டே தன்னை புகைப்படம் எடுப்பதைக் கண்டதாக Creasy கூறினார்.
"அந்த இளைஞர் தனது தொலைபேசியை வெளியே வைத்திருந்தார், அவர் அதனுடன் விளையாடுகிறார் என்று நினைத்தேன், ஆனால் அவர் புகைப்படங்களை கிளிக் செய்வதை நான் பார்த்தேன். இப்படி ஒரு சூழ்நிலையில் யாராக இருந்தாலும் தங்கள் அம்பலப்படுத்தப்படுவதைப் போன்ற உணர்வைப் பெறுவார்கள். அவர் அதிக புகைப்படங்களை எடுத்தாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உங்கள் குழந்தையை நீங்கள் கவனிக்க முயற்சிக்கும் போது, யாரோ ஒருவர் புகைப்படம் எடுப்பது கொடூரமானது, வேதனைக்குரியது" என்று அவர் தி கார்டியனிடம் கூறினார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து தொழிலாளர் கட்சி எடுக்கும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.