54 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை! சாதனை படைத்த இளம் தென்னாப்பிரிக்க வீரர்
54 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க இளம் வீரர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்க்கே (Matthew Breetzke) எனும் இளம் வீரர், ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் வரலாற்றில் 54 ஆண்டுகளாக யாரும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை), அவர் 78 பந்துகளில் 88 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
சதம் அடிக்கும் முயற்சியில் இருந்த அவர், நாதன் எல்லிசின் (Nathan Ellis) பந்தில் வெளியேறினார்.
பிரீட்ஸ்க்கே தனது ODI வாழ்க்கையை தொடங்கிய முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து 50-க்கும்மேற்பட்ட ஓட்டங்கள் எடுத்த முதல் வீரராக வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இது இதுவரை யாராலும் செய்யப்படாத சாதனையாகும்.
மேலும், பாகிஸ்தானில் நடைபெற்ற tri-series போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் 150 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், ODI அறிமுக போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.
26 வயதான பிரீட்ஸ்க்கே தென்னாப்பிரிக்காவின் வெள்ளை பந்து அணிக்கு ஒரு வலிமையான ஆட்டக்காரராக உருவெடுத்து வருகிறார். இந்த சாதனைகள், அவரை எதிர்காலத்தல் ஒரு முக்கியமான வீரராக மாற்றும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
ODI வரலாற்றில் இதுபோன்ற தொடக்கம் மிக அரிதானது என்பதால், உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை பிரீட்ஸ்க்கே பக்கம் திரும்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Matthew Breetzke ODI record, South Africa cricket news, ODI debut highest score, Breetzke 50 plus scores, South Africa vs Australia ODI, ODI cricket history 2025, Rising stars in cricket, White ball cricket South Africa