சச்சினின் நீண்ட கால ODI சாதனையை முறியடித்த பிரெண்டன் டெய்லர்
brendan taylor breaks sachin longest odi serving record: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டுகள் 148 நாட்கள் விளையாடியுள்ள பிரெண்டன் டெய்லர், சச்சினின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிய வீரர் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
சச்சினின் சாதனையை முறியடித்த பிரெண்டன் டெய்லர்
ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இன்று ஹராரேவில் நடைபெற்று வரும் முதல் ODI போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்கள் குவித்துள்ளது.
295 ஓட்டங்கள் என்ற வேற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள ஜிம்பாப்வே 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் களமிறங்கியதன் மூலமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மொத்தம் 22 ஆண்டுகள் 91 நாட்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
பிரெண்டன் டெய்லர் இன்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம், 22 ஆண்டுகள் 148 நாட்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரெண்டன் டெய்லர், 2021 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் கட்டாயத்தின் பேரில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை என கூறி ஐசிசி அவருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்தது. தடை முடிந்த பின்னர் 2025 ஆகஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பினார்.
2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.
208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிரெண்டன் டெய்லர், 39 அரைசதம் மற்றும் 11 சதங்கள் உட்பட 6,708 ஓட்டங்கள் குவித்துள்ளார்.