சச்சினுக்கு பவுலிங் செய்வதை வெறுத்த பிரெட் லீ - இந்த வீடியோவை பாருங்க
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவதை வெறுத்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய அணி வீரர் பிரெட் லீ அந்த போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.
இதனிடையே சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூட்யூப் சேனலில் பேசிய பிரெட் லீ ச்சினுக்கு பவுலிங் செய்வதை நான் மிகவும் வெறுத்ததாக தெரிவித்துள்ளார். அவர் சிறப்பாக விளையாடினார். அவரது திறமை அற்புதமானது எனவும் லீ கூறியுள்ளார்.
மேலும் தான் எதிர்கொள்வதற்குப் பயந்த பந்துவீச்சுகளில் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சு முக்கியமானது. அதனை எதிர்கொள்வது கடினமான ஒன்று என பிரெட் லீ கூறியுள்ளார்.
சச்சின் குறித்த அவரது கருத்தை தொடர்ந்து ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் யார்க்கர் போடும் பிரெட் லீயின் பந்து வீச்சை அசால்டாக நேர்திசையில் அடித்து சச்சின் பவுண்டரிக்கு விரட்டுகிறார். அதனால் தான் என்னவோ பிரெட் லீ அப்படி கூறுகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The magic Sachin drive.
— Rob Moody (@robelinda2) June 28, 2020
MCG going insane.
"Lee going for the yorker....didn't miss the yorker by much.....Tendulkar didn't miss the middle of the bat either..."
151.4 km/hr
? pic.twitter.com/VIZBrsgnax