இந்திய அணிக்கு இனி தான் மிகப் பெரிய பிரச்சனையே காத்திருக்கு! எச்சரிக்கும் பிரட் லீ
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ, இனி தான் இந்திய அணியில் பிரச்சனையே இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி, நீக்கப்பட்டு ரோகித்சர்மா அதிரடியாக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ-ன் இந்த முடிவு கோலி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.
அதன் பின் பிசிசிஐ கோலியை ஏன் தூக்கினோம் என்பது குறித்து தெளிவான விளக்கம் கொடுத்திருந்தது.
இந்நிலையில், இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ, இனி தான் இந்திய அணியில் பிரச்சனையே இருக்கு என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது சரியான முடிவு தான், இதன் மூலம் அவர் எந்த ஒரு அழுத்தம் இல்லாமல் விளையாட முடியும்.
டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர் கேப்டனாக இருப்பது நல்ல முடிவு, ஆனால் இதுவே இந்திய அணியில் ஒரு பிளவை ஏற்படுத்திவிடக் கூடாது.
அணியில் இருக்கும் வீரர்கள் சிலர் கோலிக்கு ஆதரவாகவும், ரோகித்திற்கு சிலர் ஆதரவாகவும் மாறியதால் அது இந்திய அணிக்கு மிகப் பெரும் பின்னடைவை கொடுத்துவிடும், அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.