முதல்ல ஹெல்மேடு போடுங்கப்படா... - Selfie கேட்ட ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய பிரெட் லீ
Selfie கேட்டு பைக்கில் பின்தொடர்ந்த ரசிகர்களை ஹெல்மேட் போடச் சொன்ன பிரெட் லீயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், சீசனில் நன்றாக ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சந்தீப் ஷர்மாவை பாராட்டிய பிரெட் லீ
இந்தப் போட்டி குறித்து பிரெட் லீ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
செம டச்சில் இருந்த தோனிக்கு ஈரமான பந்தில் வீசினார் சந்தீப் ஷர்மா. மேலும் மொத்த ரசிகர் பட்டாளமும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கேவிற்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அப்பேர்ப்பட்ட அழுத்தத்தில் தோனிக்கு பந்து வீசுவது எளிது கிடையாது. முழு கிரெடிட்டும் சந்தீப் ஷர்மாவுக்குத்தான் என்று புகழாரம் சூட்டினார்.
ஹெல்மெட் அணியச் சொன்ன பிரெட் லீ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
பிரெட் லீ காரை பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் ஒரு செல்பி கேட்டுக் கொண்டு வந்தனர். அப்போது, தன்னை பின்தொடர்ந்து வந்தவர்களிடம், ஹெல்மெட் அணியுமாறு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ப்ரெட் லீ அறிவுறுத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
India is always full of wonderful surprises! Love the passion ???? #wearalid boys ⛑️ pic.twitter.com/gTDv8O4AmK
— @BrettLee_58 (@BrettLee_58) April 12, 2023