32 பந்தில் 75 ஓட்டங்கள் விளாசல்! 13.4 ஓவரிலேயே இலக்கை எட்டி..ஜிம்பாப்வேயை சிதைத்த பிரேவிஸ்
South Africa beat Zimbabwe by 7 wickets: டெவால்ட் பிரேவிஸின் அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
Windhoek-யில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
ஜென்சென் 3 விக்கெட்டுகள்
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி Windhoek-யில் நடந்தது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. பிரையன் பென்னெட் 34 ஓட்டங்களும், மருமானி 30 ஓட்டங்களும், பென் கர்ரன் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
டுயன் ஜென்சென் 3 விக்கெட்டுகளும், சுப்ராயென் 2 விக்கெட்டுகளும், போஷ், மாபாகா மற்றும் ஃபோர்டுய்ன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பிரேவிஸ் ருத்ரதாண்டவம்
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் பிரிட்டோரியஸ் 22 ஓட்டங்களும், ஹெர்மன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) ஆட்டமிழக்காமல், 32 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. முஸரபாணி, நியூமன் மற்றும் பிராட் எவன்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |