அவுஸ்திரேலிய மண்ணில் கோலியின் சாதனையை முறியடித்த பிரேவிஸ்
அவுஸ்திரேலிய மண்ணில் கோலியின் சாதனையை பிரேவிஸ் முறியடித்துள்ளார்.
தொடரை வென்ற அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென்ஆப்பிரிக்கா அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 2 T20 போட்டிகளில் வெற்றி பெற்று, அவுஸ்திரேலியா அணி T20 தொடரை கைப்பற்றியுள்ளது.
நேற்று நடைபெற கடைசி T20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா வீரர் பிரேவிஸ் அதிரடியாக ஆடி, 26 பந்துகளில் 6 சிக்ஸர் ஒரு பவுண்டரி உட்பட 53 ஓட்டங்களை குவித்தார்.
இதன் மூலம் அவுஸ்திரேலியா மண்ணில், பிரேவிஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பிரெவிஸ் சாதனை
அவுஸ்திரேலியாவில் 3 T20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரேவிஸ், 14 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரேவிஸ் படைத்துள்ளார்.
முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி, அவுஸ்திரேலியாவில் 10 T20 போட்டிகளில் விளையாடி, 12 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
பிரெவிஸ் 3 போட்டிகளிலே அந்த சாதனையை முறியடித்துள்ளார். முதல் போட்டியில் சிக்ஸர் அடிக்காத அவர், 2வது போட்டியில் 8 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |