அவுஸ்திரேலிய பந்துவீச்சை சிதைத்து 41 பந்தில் சதம்! வாணவேடிக்கை காட்டிய பேபி AB
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டெவல்ட் பிரேவிஸ் அதிரடி சதம் அடித்தார்.
டெவல்ட் பிரேவிஸ்
டார்வினில் நடந்து வரும் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
The second-quickest T20I hundred from a South African player!
— cricket.com.au (@cricketcomau) August 12, 2025
Dewald Brevis, take a bow 👏#AUSvSA pic.twitter.com/JOpk3tptGT
தென் ஆப்பிரிக்க அணியின் பேபி ஏபி டி வில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis), அவுஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தார்.
நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்ட பிரேவிஸ், 41 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன்மூலம் அதிவேக டி20 சதம் அடித்த இரண்டாவது தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
125 ஓட்டங்கள் விளாசல்
தொடர்ந்து ஆடிய பிரேவிஸ் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் குவித்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் எடுத்த பாப் டூ பிளெஸ்ஸின் (119) சாதனையை முறியடித்தார்.
THE SHEER BRILLIANCE OF DEWALD BREVIS. 🤯pic.twitter.com/3rC5vY2ruF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2025
அத்துடன் அவுஸ்திரேலிய மண்ணில் அதிக ஸ்கோர் குவித்த ஷான் வாட்சனின் (124) சாதனையை பிரேவிஸ் தகர்த்தார்.
பிரேவிஸின் அதிரடியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் குவித்தது. மேக்ஸ்வெல் மற்றும் ட்வர்ஷுய்ஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |