மைதானத்தை விட்டு வெளியே பறந்த சிக்ஸர்! அவுஸ்திரேலியாவை நொறுக்கும் பிரேவிஸ்..22 பந்தில் 50 ரன்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20யில் எய்டன் மார்க்ரம் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
மார்க்ரம் அவுட்
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி கெய்ர்ன்ஸில் நடந்து வருகிறது.
Josh Hazlewood strikes with the fifth ball of the game!#AUSvSA pic.twitter.com/1p1cBRkzFg
— cricket.com.au (@cricketcomau) August 16, 2025
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க துடுப்பாட்டத்தை துவங்கியது.
ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரிலேயே தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் (Aiden Markram) 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பிரேவிஸ்
அடுத்து பவுண்டரிகளை விரட்டிய லுஹான் பிரிட்டோரியஸ் 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசிய நிலையில் எல்லிஸ் ஓவரில் அவுட் ஆனார்.
THREE NO-LOOK SIXES IN A ROW FROM DEWALD BREVIS!@BKTtires | #PlayoftheDay | #AUSvSA pic.twitter.com/2w1BpmQR8T
— cricket.com.au (@cricketcomau) August 16, 2025
பின்னர் ஜம்பா பந்துவீச்சில் ரிக்கெல்டன் (13) ஆட்டமிழந்து வெளியேற, டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தை விட்டே வெளியே பறந்தது.
ஹார்டி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பிரேவிஸ், 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |