'Baby AB' செல்லப்பெயர் எனது பாக்கியம்: ஏபி டிவில்லியர்ஸை எப்போதும் வணங்குகிறேன்..இளம் வீரர் உருக்கம்
தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் 'Baby AB' என்ற செல்லப்பெயரை தனது பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
டெவல்ட் பிரேவிஸ்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் அதிரடி வீரராக வலம் வருபவர் டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis).
22 வயது வீரரான பிரேவிஸ், 10 டி20 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 318 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 26 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும்.
துடுப்பாட்டத்தில் இறங்கினாலே சிக்ஸர்களை பறக்கவிடுவது, நாலாபுறமும் ஓட்டங்களை விளாசுவது போன்ற ஸ்டைல்களால் 'பேபி ஏபி' என்று இவர் அழைக்கப்படுகிறார்.
அதாவது, தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் ஏபி டி வில்லியர்ஸை போல விளையாடுவதால், அவரது ஜூனியர் என்பதை குறிக்கும் நோக்கில் ரசிகர்கள் இவ்வாறு அவரை அழைக்கின்றனர்.
உங்களை வணங்குகிறேன்
இந்த நிலையில் 'பேபி ஏபி' என்ற செல்லப்பெயர் தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "எனக்கு பேபி ஏபி என்ற செல்லப்பெயர் ஒருபோதும் ஒரு சுமையாக இருந்ததில்லை. நான் எப்போதும் உங்களை (ஏபி டி வில்லியர்ஸ்) உயர்வாகப் பார்த்திருக்கிறேன். எப்போதும் உங்களை வணங்குகிறேன். இன்னும் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்.
உங்களுடன் ஒப்பிடப்படுவது; நான் அதை ஒரு பெரிய பாக்கியமாகப் பார்க்கிறேன், அது எனக்கு உலகத்தையே குறிக்கிறது.
அதன் காரணமாக நான் ஒருபோதும் அழுத்தத்தை உணர்ந்ததில்லை. நான் எப்போதும் அதை ஒரு பெரிய கௌரவமாகவே பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |