பிரெக்சிட் ஒப்பந்தம் உலகுக்கே நல்ல செய்தி: பிரெக்சிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல் நாடு
பிரெக்சிட் ஒப்பந்தம் உலகுக்கே நல்ல செய்தி என்று கூறியுள்ளது சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதியான Guy Parmelin, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் செய்யப்படும் பிரெக்சிட்டுக்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் முழு உலகுக்கும் ஒரு நல்ல செய்தி என்று கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இல்லாதிருந்தும் அதன் சந்தை அனுமதியை பெற்றுள்ள ஒரு நாடாகும்.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தம் குறித்து முதல் நாடாக கருத்து தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து, சுவிட்சர்லாந்துக்கும் இந்த ஒப்பந்தம் குறித்த செய்தி வரவேற்கத்தக்க செய்தியாகும் என்று கூறியுள்ளது.
பிரெக்சிட்டுக்குப் பின் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறியுள்ளது என்பது மொத்த உலகுக்கும் ஒரு நல்ல செய்தி என்று கூறிய சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதியான Guy Parmelin, அது சுவிட்சர்லாந்துக்கும் நல்ல செய்தி என்றார்.
Guy Parmelin, வரும் வெள்ளிக்கிழமையன்று, இப்போதைய ஜனாதிபதியாகிய Simonetta Sommarugaவிடமிருந்து பொறுப்புக்களை பெற்று, சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.