பிரெக்சிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம்... பிரான்சுக்கு எதிராக திரும்பியுள்ள அயர்லாந்து
அயர்லாந்திலிருந்து பிரித்தானிய கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற அயர்லாந்து படகு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், பிரெக்சிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்து தனது கோபத்தை பிரான்ஸ் மீது திருப்பியுள்ளது. பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் செய்யப்பட்ட பிரெக்சிட்டுக்கு பிந்தைய ஒப்பந்தத்தில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பிரித்தானிய கடல் பகுதியில் பிடிக்கும் மீன்களில் 25 சதவிகிதத்தை பிரித்தானியாவுக்கு கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐந்தரை ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.
ஆனால், கடல் பகுதியை பிரித்ததில், மீன் பிடித்தலில் பிரான்சுக்கு லாபம் என்றும் தங்களுக்கு நஷ்டம் என்றும் கூறியுள்ளது அயர்லாந்து.
பிரான்சுக்கு வேண்டியது அவர்களுக்கு கிடைத்துவிட்டது, அவர்களால் பிரித்தானிய கடல் பகுதியில் 12 மைல் தொலைவு அளவுக்கு மீன் பிடிக்க முடியும், ஆனால், அயர்லாந்துக்கு அந்த உரிமை கொடுக்கப்படவில்லை.
ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையின்போது Barnierஇடம் பேசிய மேக்ரான் என்ன பேசினார் என்பது நமக்குத் தெரியாது.
ஆனால், அயர்லாந்து பலிகடா ஆகிவிட்டது, கானாங்கெளுத்தி மற்றும் இறால் மீன்களில் பெரும்பங்கை நாம் இழந்துவிட்டோம் என்று கூறியுள்ளார் அயர்லாந்து மீனவ அமைப்பின் தலைவரான Sean O'Donoghue.
ஆக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள்ளேயே பிரிவை ஏற்படுத்தியுள்ள மீன் பிடித்தல் பிரச்சினையைப் பார்க்கும்போது, பிரெக்சிட் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டதுபோல் உள்ளது!