Brexit முடிவால் பிரித்தானியா இழந்த தொகை... லண்டன் மேயர் வெளியிட்ட மலைக்கவைக்கும் கணக்கு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியாவின் பொருளாதாரம் இதுவரை 6 சதவிகிதமாக சுருங்கியுள்ளதாக லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை
அதாவது ஆண்டுக்கு 140 பில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக லண்டன் மேயர் குறிப்பிட்டுள்ளார். இதே நிலை நீடிக்கும் என்றால் 2035ல் 10 சதவிகிதமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
@reuters
2016ல் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் Brexitக்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் உறுப்பினராவார் சாதிக் கான். Brexit முடிவால் பிரித்தானியாவுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள சாதிக் கான், நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்ததுடன், விலைவாசி உயர்வும் ஏற்பட்டது என்றார்.
பிரித்தானியாவில் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக தொழிலாளர் கட்சி குறிப்பிடத்தக்க முன்னிலையில் உள்ளது.
முதலீடுகளை இழக்க வைத்துள்ளது
ஆனால் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பிரதமர் ரிஷி சுனக் உள்ளார். Brexit முடிவு ஏமாற்றமளிப்பதாக சாதிக் கான் குறிப்பிட்டிருந்தாலும், தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றிய விவரங்களை வெளியிடுவதில் எச்சரிக்கையாகவே உள்ளார்.
Brexit முடிவு பிரித்தானிய பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவிகித சரிவை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது பிரித்தானியாவின் NIESR அமைப்பு.
மேலும், Brexit முடிவானது முதலீடுகளை இழக்க வைத்துள்ளதுடன், 2022 முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவிகிதம் அளவுக்கு சரிவை ஏற்படுத்தியதாகவும் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பமும் 1,000 பவுண்டுகளை இழந்துள்ளது என்றே கணக்கிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |