இங்கிலாந்து மண்ணில் புதிய வரலாறு எழுதிய ஜிம்பாப்பே வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் ஜிம்பாப்பே வீரர் பிரையன் பென்னெட் அதிரடி சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஓலி போப் 171 ஓட்டங்கள்
நாட்டிங்காமின் ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 565 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஓலி போப் 171 (166) ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்பே அணியில் பிரையன் பென்னெட் அதிரடியில் மிரட்டினார். தொடர் பவுண்டரிகளை விரட்டிய அவர், 97 பந்துகளில் சதம் விளாசினார்.
பிரையன் பென்னெட் வரலாற்று சாதனை
இதன்மூலம் டெஸ்டில் அதிவேகமாக சதம் விளாசிய ஜிம்பாப்பே வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். 143 பந்துகளை எதிர்கொண்ட பிரையன் பென்னெட் (Brian Bennett) 26 பவுண்டரிகளுடன் 139 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் பெரிதாக ஓட்டங்கள் எடுக்கவில்லை. இதனால் ஜிம்பாப்பே அணி 265 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்பே, 2ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |