6 ஓட்டங்களில் முதல் டி20 சதத்தை தவறவிட்ட வீரர்: ஜிம்பாப்வே அதிரடி வெற்றி
நமீபியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மருமானி 62 ஓட்டங்கள்
புலவாயோவில் நடந்த டி20 போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னெட் மற்றும் மருமானி கூட்டணி 124 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய மருமானி (Marumani) 48 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரியல் பர்ல் (Ryan Burl) 9 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்கள் குவித்தார்.
சதத்தை தவறவிட்ட பிரையன் பென்னெட்
மறுமுனையில் வாணவேடிக்கை காட்டிய பிரையன் பென்னெட் (Brian Bennett) 94 (51) ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
43 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பென்னெட்டிற்கு இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) ஆட்டமிழக்காமல் 11 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் விளாச, ஜிம்பாப்வே 3 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய நமீபியா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்களே எடுத்ததால், ஜிம்பாப்வே 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஈட்டன் 24 பந்துகளில் 38 ஓட்டங்களும், ஸானே கிரீன் 27 பந்துகளில் 33 ஓட்டங்களும் எடுத்தனர். முஸரபாணி மற்றும் ரஸா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |