ஐபிஎல் தான் உங்களுக்கு சாப்பாடு போடுது! இப்படியா விளையாடுவீங்க... 2 இளம் வீரர்களை கடுமையாக கண்டித்த பிரைன் லாரா
இந்திய அணியை சேர்ந்த இளம் வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தங்கள் பார்மை இழந்த நிலையில் அவர்களை ஜாம்பவான் பிரையன் லாரா கண்டித்துள்ளார்.
ஐபிஎல்லில் சமீபத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவி பிஷ்னாயின் கூக்ளியில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார் சூரியகுமார் யாதவ். அதே போல மும்பை இந்தியன்ஸில் தன் இடத்தை இழந்தார் இஷான் கிஷன்.
இந்த இரண்டு இளம் வீரர்கள் பார்ம் அவுட்டாகி தவித்து வருகிறார்கள். யாதவ் இலங்கைக்கு எதிராக 50 ரன்கள் எடுத்ததோடு சரி அதன் பிறகு ஐபிஎல் தொடரில் அவர் 3, 5, 8, 0 என்று சொதப்பி வருகிறார். இதற்கு முன்பு இதே தொடர் இந்தியாவில் நடந்த போதும் 16 மற்றும் 3 என்பதே அவரது ஸ்கோராக இருந்தது.
இவர்கள் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா, இந்திய அணிக்குத் தேர்வாகி விட்டொம் என்பது கூட இருவரது பின்னடைவுக்குக் காரணமாக இருக்கலாம். நிறைய வீரர்கள் தங்கள் கடந்த கால பெருமைகளிலேயே திளைத்து வருகின்றனர்.
இந்திய அணியின் நினைவில் இருக்கின்றனர், அது மிகவும் முக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் இங்குதான் உங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தான் உங்களை வெளி உலகுக்குக் காட்டியுள்ளது.
சூரியகுமாரைப் பாருங்கள், இஷான் கிஷனையும் பாருங்கள் அதே வேளையில் சவுரவ் திவாரியைப் பாருங்கள், சவுரவ் திவாரிக்கு அவர்களை விட அதிக ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.
இஷான் கிஷனும், சூரியகுமார் யாதவும் தொழில்நேர்த்தியுடன் அணியை வெற்றி பெற செய்வதில் நாட்டம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.