வரவேற்பு மேடையில் தகாத முறையில் நடந்துகொண்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமகன் வரவேற்பு மேடையில் மணப்பெண்ணுக்கு முத்தமிட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமண வரவேற்பு
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த 27ஆம் திகதி 26 வயது நபருக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றிருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியபோது, அனைவரது முன்னிலையிலும் மணமகன் மணப்பெண்ணுக்கு முத்தமிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு வந்துள்ளனர். அதன் பின்னர் இருவரது குடும்பத்தினரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தவறாக நடந்துகொண்டதாக மணமகள் புகார்
அங்கு மணமகன் குறித்து குற்றம்சாட்டிய மணப்பெண், 'அவர் என்னை முத்தமிட்டபோது நான் அவமானப்பட்டதாக உணர்ந்தேன். என் சுயமரியாதையைப் பற்றி கவலைப்படாமல், பல விருந்தினர்கள் முன்னிலையில் அவர் தவறாக நடந்துகொண்டார்' என கூறினார்.
மேலும், மணமகன் அவரது நண்பர்களால் தூண்டப்பட்டார். எங்களை மகளை சமாதானப்படுத்த முயற்சித்தோம். ஆனால் அவர் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். நாங்கள் சில நாட்கள் காத்திருக்கவும், சிறிது நேரம் எடுத்து முடிவெடுக்கவும் உள்ளோம் என மணமகளின் தாய் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மணமகளை பொலிஸாரும் சமரசம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
நண்பர்களிடம் பந்தயம் கட்டியதால் மணமகன் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.