திருமண கொண்டாத்தில் மஞ்சள் பூசியதால் உயிரிழந்த மணப்பெண்: உயிருக்கு போராடும் மணமகன்
மத்திய பிரரேசத்தில் நச்சு கலந்த மஞ்சளை பூசிய மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ஹால்டி(Haldi) என அழைக்கப்படும் மஞ்சள் பூசும் கொண்டாட்டத்தில் நச்சு கலந்த மஞ்சள் கலவை பயன்படுத்தப்பட்டதில் 21 வயது மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏப்ரல் 26ம் திகதி நடைபெற இருந்த திருமண விழாவிற்கு முன்னதாக ஏப்ரல் 22ம் திகதி இந்த ஹால்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
உடலில் மஞ்சள் கலவை பூசப்பட்ட சிறிது நேரத்திலேயே மணமகளுக்கு தீவிரமான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்கோனில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும் துர்திஷ்டவசமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளம் பெண் 21 வயது ராக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த மணப்பெண் ராக்கி-க்கு உதடு மற்றும் தொண்டை பகுதியில் கடுமையான வீக்கம், உடல் முழுவதும் சிவந்த தடிப்புகள் மற்றும் மூச்சு திணறல் ஆகியவை ஏற்பட்டுள்ளது.
மணமகன் கவலைக்கிடம்
அதே நேரத்தில் மஞ்சள் கலவை பூசப்பட்டதில் மணமகனும் திவீர உடல்நல குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.
அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கொண்டாட்டத்தின் போது மஞ்சளை தொட்டு பயன்படுத்திய பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |