மணமகளை பண மழையில் மூழ்கடித்த மணமகன்: பஞ்சாபில் நடைபெற்ற விசித்திரமான திருமணம்
பஞ்சாபில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் மீது பண மழை கொட்டப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது
பண மழையில் நனைந்த மணமகள்
பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமகள் மீது “பண மழை” கொட்டப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவில், மணமகன் தன்னுடைய கையில் பணம் அடங்கிய பெரிய பை ஒன்றை வைத்துள்ளார்.
A video circulating on social media claiming that the groom’s family showered the bride with ₹8.5 crore in cash at a Punjabi wedding is fake. The video is from Patti, Tarn Taran. According to the DJ, the total cash collected was around ₹4 lakh, including US dollars. pic.twitter.com/PxXxIV1kAd
— BharatXnow (@BharatXnow) February 18, 2026
அதிலிருந்து பணத்தை எடுத்து மணமகன் மேடையில் நின்று கொண்டிருந்த மணமகள் மீது மழையாக வீசுகிறார்.
இந்த கொண்டாட்டத்தில் மணமகனின் குடும்பத்தினரும் இணைந்து மணமகள் மீது பணத்தை கொட்டுகின்றனர்.
இதனால் திருமண மேடையே பணத்தால் கடலை போல் காட்சியளிக்க தொடங்கிறது.
அங்கே சிதறிக் கிடக்கும் பணத்தை அங்கிருந்த பணியாளர்கள் எடுக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கொட்டப்பட்ட பணத்தின் மதிப்பு

அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த திருமணத்தில் கொட்டப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்த தகவல் இன்னும் குழப்பமாகவே உள்ளது.
சமூக வலைதளங்களில் சுமார் 8.5 கோடி வரை கொட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அந்த திருமணத்தில் பணியாற்றிய சிலர் வழங்கிய தகவலில், இதில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை கொட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |