விபத்தில் சிக்கிய மணமகள் - மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்
மணமகள் விபத்தில் சிக்கியதால், மருத்துவமனையில் வைத்து மணமகன் தாலி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய மணமகள்
கேரள மாநிலம் ஆலப்புழாவின் கொம்முடியை சேர்ந்த ஆவணி(Aavani) என்பவருக்கும், தம்பொலியை சேர்ந்த ஷரோன்(Sharon) என்பவருக்கும், ஆலப்புழாவில் உள்ள சக்தி ஆடிட்டோரியத்தில் நேற்று மதியம் 12.12 மணிக்கு திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

நேற்று அதிகாலையில், மணப்பெண் அலங்காரத்திற்காக ஆவணி தனது குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தை சந்தித்தது.
உள்ளூர் வாசிகள் உடனடியாக அவர்களை மீட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதன்பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள வி.பி.எஸ். லேக்ஷோர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மணப்பெண் ஆவணிக்கு முதுகுத்தண்டு வடத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் திருமணம்
அதேவேளையில், இதன் காரணமாக திருமணத்தை ஒத்தி வைக்க வேண்டாம் என கருதிய இரு குடும்பத்தினரும் மருத்துவமனையில் வைத்தே திருமணத்தை நடத்த திட்டமிட்டனர்.
In a moment of extraordinary love and resilience, a #Kerala couple went ahead with their #wedding inside a #hospital emergency room after the bride met with a #roadaccident en route to bridal makeup and suffered a spinal #injury. With both families, doctors and hospital staff… pic.twitter.com/g9gO59XfsI
— Salar News (@EnglishSalar) November 22, 2025
மருத்துவர்களின் அனுமதியுடன், அவசர சிகிச்சை பிரிவில் படுத்திருந்தஆவணியின் கழுத்தில் மணமகன் ஷரோன் தாலி கட்டினார்.
திருமணத்தை காண மண்டபத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு வழக்கம் போல் திருமண விருந்து பரிமாறப்பட்டது.
அவணியுடன் பயணித்த மேலும் 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்றுஆவணிக்கு முதுகு தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |