திருமணத்தில் மொய் வசூலிக்க சட்டையில் QR Codeஐ ஒட்டிய தந்தை- வைரல் வீடியோ
திருமணம் என்பது ஒருவர் வாழ்விலேயே மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மொய் பணமாக வைப்பது வழக்கம்.
திருமணத்தில் இந்த மொய் பணத்தை வைக்க பொதுவாக அனைவரும் ஒரு மொய் கவர் வாங்கி அதில் பணத்தை போட்டு வைப்பர்.

இந்நிலையில், திருமணத்தில் மொய் வைப்பவர்களுக்கு வசதியாக இருக்க QR Scannerஐ தனது சட்டையில் வைத்துக்கொண்ட தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளாவில், திருமணம் செய்துகொண்ட மணப்பெண்ணின் தந்தை, QR Code ஸ்கேனரை, நகல் எடுத்து, தன் சட்டைப்பையில் குத்திக்கொண்டார்.
Brides Father 🤣* in Kerala
— சங்கரிபாலா (@sankariofficial) October 29, 2025
New Marriage Trend 🙏🙏
தட் மணமகளின் அப்பா …
செலவு அப்படிங்க…!!!! pic.twitter.com/94HbpvXrJn
பின்பு விருந்தினர்கள் மொய் வைக்க வேண்டுமென்றால், இதை ஸ்கேன் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் பலரும் ஸ்கேன் செய்து மொய் வைத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவிதையும் பெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        