Viral video:மாப்பிள்ளை மீது ஏறி மணமகள் ஸ்டண்ட்! போட்டோஷூட் அலப்பறை
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
இவற்றில் சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், ஆனால் இந்நாட்களில் திருமண போட்டோஷூட் என்ற பெயரில் போட்டோ எடுப்பவர்களும் ஜோடிகளும் செய்யும் அலப்பறைகளை தாங்க முடிவதில்லை.
சமூக ஊடகங்களில் திருமண போட்டோஷூட் வீடியோக்கள் வைரல் ஆவதுண்டு. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.இதில் மணப்பெண் ஸ்டண்ட் செய்து போட்டோஷூட் செய்துள்ளார்.
இந்த நாட்களில் மக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதற்கு விசித்திரமான விஷயங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர். போட்டோஷூட்டிற்காக மணமகள் ஒருவர் மணமகனின் மீது ஏறி நிற்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.
மணமகள் தனது ஒரு காலை மணமகனின் தலையில் வைத்தும், மற்றொரு காலை மணமகனின் முழங்காலில் வைத்தும் பிரமாண்டமான ஸ்டண்ட் செய்கிறார்.
இந்த மணப்பெண் வித்தியாசமான ஸ்டைலில் போஸ் கொடுத்து பயனர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் zevarbride என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன.இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |