முகேஷ் அம்பானியின் மகள் இஷாவை விட பெண் ஒருவரின் திருமண நகைகளின் மதிப்பு அதிகம்: யார் அவர்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டில் மீண்டும் ஒரு திருமண விழா கொண்டாடப்படவிருக்கிறது.
பல கோடிகள் மதிப்பிலான நகை
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தின் பிரம்மாண்டத்தை இஷா அம்பானியின் திருமணத்தில் இருந்தே ஊகிக்க முடியும் என்கிறார்கள்.
இஷா அம்பானியின் திருமணத்திற்காக பல கோடிகள் செலவிடப்பட்டது. பல கோடிகள் மதிப்பிலான நகைகளை இஷா அம்பானி அணிந்திருந்தார். ஆனால், கர்நாடகாவைச் சேர்ந்த மணமகள் ஒருவரின் திருமண நகைகள் இஷா அம்பானியின் நகைகளின் விலையை விட அதிகம் என்றே கூறப்படுகிறது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டியின் மகள் பிராமணிக்கும் ராஜீவ் ரெட்டிக்கும் 2016ல் நடந்த திருமணம் பிரம்மாண்டத்தின் உச்சம் என்றே அப்போது கூறப்பட்டது.
5 நாட்கள் நீடித்த திருமண விழா
சுமார் ரூ.500 கோடி செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக ஆடம்பரமான திருமணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பிராமணி தனது திருமணத்தின் போது சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் அணிந்திருந்தார்.
இது தவிர ரூ 150 கோடி அளவுக்கு தங்க வைர நகைகள் அவர் அணிந்திருந்தார். சுமார் 30 லட்சம் செலவிடப்பட்டு, 50க்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள் மணமகளை தயார் செய்திருந்தனர். மொத்தம் 5 நாட்கள் நீடித்த இந்த திருமண விழாவில் 50,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
2018ல் நடந்த இஷா அம்பானியின் திருமணத்தின் போது அவர் ரூ 165 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்திருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |