பிரித்தானியாவில் சூட்கேசுக்குள் சடலமாக மீட்கப்பட்ட புதுமணப்பெண் வழக்கில் திருப்பம்: மணமகன் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவில் திருமணம் முடிந்த நான்காவது நாள் சூட்கேசுக்குள் சடலமாக மீட்கப்பட்ட புதுமணப்பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக மணமகனே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிஃபாக்ஸ், மேற்கு யார்க்ஷயர் பகுதியில் சிறார்களுக்கான விளையாட்டுத்திடல் அருகே ஞாயிறன்று சூட்கேசுக்குள் திணிக்கப்பட்ட நிலையில் 52 வயதான Dawn Walker என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த பொலிசார், செவ்வாய்க்கிழமை Dawn Walker-ன் கணவர் 45 வயதான Thomas Nutt என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்ட Thomas Nutt, தமது மனைவியை கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இது திட்டமிட்டு நடந்த கொலை அல்ல எனவும், உண்மையில் தமது மனைவியை கொல்லவோ காயப்படுத்தவோ அவர் விரும்பியதில்லை எனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஒளிவுமறைவின்றி நடந்தவற்றை குறிப்பிட்டுள்ளதுடன், மனைவியை கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை 2022 பிப்ரவரி மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.