Viral video: JCPயில் எண்ட்ரி கொடுத்த மணமக்கள்!.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன.
சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், காதல் வசனங்கள் பேசுவதையும், நாம் பார்த்துள்ளோம்.
சமீப காலங்களில் மணமக்கள் வித்தியாசமான முறைகளில் மணமேடைக்கு எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அசத்துகிறார்கள்.தற்போதும் அப்படி ஒரு எண்ட்ரி வீடியோ சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது இதில், இருவரும்.
வழக்கமாக மணமக்கள் வருவது போல் காரிலோ அல்லது குதிரையிலோ வராமல், ஜேசிபியில் அமர்ந்து திருமணத்திற்கு பிரமாண்டமாக வருகின்றனர். விருந்தாளிகளும் இந்த வினோதமான எண்ட்ரியைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
மணமக்கள் அமர்ந்திருந்த ஜேசிபி உடைந்த நிலையில், மணமகனும், மணமகளும் நேராக தரையில் விழுவதை வீடியோவின் முடிவில் காணமுடிகிறது.
அவர்கள் விழுந்த விதத்தை பார்த்தால், அவர்களுக்கு அதிக காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். இருவரும் விழுவதை பார்த்து அங்கிருந்த விருந்தாளிகளும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்து வருகின்றன.
இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் இந்த புதுமண ஜோடிக்காக பரிதாபப்பட்டாலும், சிலர், ‘இது தேவையா?’ என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |