கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை.., இணையத்தில் வைரலாகும் விளம்பரம்
கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்ற விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரல்
தற்போதைய காலத்தில் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ திருமணம் முடித்து வைப்பது என்பது எளிதான விடயம் அல்ல. அவர்களின் படிப்பு, எதிர்பார்ப்பு என அனைத்திற்கும் ஏற்றவாறு மணமக்கள் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், வயது, கல்வித் தகுதி, சமூகம், பொருத்தம், வசதி உள்ளிட்டவற்றை வைத்தும் பார்க்க வேண்டும். ஆனால், தற்போது இதையெல்லாம் எளிதாக்க மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை ஆகியவை இருக்கிறது.
இங்கு வரன் பார்க்கும் பெற்றோர்கள், பிள்ளைகளின் வயது, நிறம், கல்வித் தகுதி, சமூகம் உள்ளிட்ட சுய விவரங்களை கொடுப்பார்கள். இந்நிலையில், மணமகள் தேவை என்ற விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பரத்தில் "கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை" என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |