ஞாயிற்றுக்கிழமைக்குள் வீடுகளை காலிசெய்ய உத்தரவு: பரபரப்பில் சுவிஸ் கிராமம் ஒன்று
சுவிஸ் கிராமம் ஒன்றில் வாழும் மக்கள், ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணிக்குள் கிராமத்தை காலிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனடியாக வீடுகளை காலிசெய்ய உத்தரவு
சுவிஸ் கிராமமான Brienzஇல் வாழும் மக்களே உடனடியாக ஊரைக் காலிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு பெரும் அபாயம் உருவாகியுள்ளது.
என்ன அபாயம்?
சுவிஸ் கிராமமான Brienz, மலை ஒன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பொதுவாகவே அந்த மலையிலிருந்து அவ்வப்போது பாறைகள் உருண்டு வருவதுண்டு.
தற்போது மீண்டும் பாறைகள் உடைந்து உருண்டு வரும் அபாயம் உள்ளதைத் தொடர்ந்தே, அக்கிராம மக்கள் உடனடியாக வீடுகளை காலி செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை, மனிதர்கள் மட்டுமல்ல, கால்நடைகளையும் கிராமத்திலிருந்து வெளியேற்ற அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளார்கள்.
அவர்கள், குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்ப வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், அக்கிராம மக்கள் தவிர்த்து, புதிதாக வேறு யாரும் கிராமத்துக்குள் வர அனுமதியும் மறுக்கப்படுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |