முகத்தை பளபளப்பாக்கும் காபி தூள்! எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?
Beauty tips
Face Pack
Brighten
CofeePowder
By Kishanthini
பொதுவாக காபி பவுடர் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக இது சருமத்துக்கு தரும் புத்துணர்ச்சியை சிறப்பாக தருகிறது. காபி பொடியில் இருக்கும் வேதிபொருள்கள் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை சீராக்குகிறது.
சருமத்தை தளராமல் வைத்திருக்க உதவுகிறது. என்றும் இளமை தோற்றத்தை முகத்துக்கு தர உதவுகிறது.
அதோடு சருமத்தில் இறந்த செல்களை அவ்வபோது நீக்கி பொலிவு தரவும் உதவுகிறது.
அழகு பொருளை வெளியில் தேடி ஓடாமல் காபிபொடியை கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.
- கடலை மாவுடன், காபி தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்கவேண்டும். இதனை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவினால் முகம் பளிச்சென்று தோன்றும்.
- இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது மென்மையாக இருக்கும்.
-
காபி தூளை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலுமிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
- கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
- 4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
- 4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
- காபி தூள் ஒரு கப் , ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.
- ஒரு கப் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US