நான் அவள் இல்லை... கனடாவில் பல வேடங்கள் போட்டு மோசடி செய்த பலே பெண் கைது
கனேடிய மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்தார்கள்.
உண்மையில், Brigitte Cleroux (49) என்னும் அந்த பெண், கடந்த 30 ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.
செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றிலிருந்து பாதியிலேயே வெளியேறிய Brigitte, தான் செவிலியர் பயிற்சி முடிக்காத நிலையிலும், போலி ஆவணங்கள் மூலம் செவிலியராக பணிக்கு சேர்ந்துள்ளார்
ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் அடுத்த இடத்துக்கு செல்வது, ஒரு வேலையில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதும் வேறொரு வேலையில் சேருவது என 1991 முதலே மோசடியில் ஈடுபட்டுள்ளார் Brigitte.
ஆல்பர்ட்டாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை செவிலியராக ஓரிடத்தில் பணியாற்றும்போது பிடிபட்டு ஜாமீனில் வெளிவந்த Brigitte, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவே, அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாளே, மூன்று மாகாணங்கள் தாண்டி ஒன்ராறியோவில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக அவர் பணியாற்றிவந்ததை அறிந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்
இப்படி மாறி மாறி பல இடங்களில் செவிலியராக பணியாற்றிய Brigitte, ஒரு பள்ளியில் அறிவியல் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போது Brigitte, Gatineauவில் வாழ்ந்து வரும் நிலையில், Ottawa பொலிசார் அவர் மீது பல் மருத்துவமனை ஒன்றில் மோசடி செய்து போலி ஆவணங்கள் மூலம் செவிலியராக பணியாற்றியதாக குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறார்கள்.
நான் அவன் இல்லை என்ற பெயரில் தமிழ் சினிமா ஒன்று வந்ததுண்டு. அதில் கதாநாயகன் வெவ்வேறு வேடங்கள் போட்டு மோசடியில் ஈடுபடுவார். பிடிபட்டால், நான் அவன் இல்லை என்பார். அதுபோல இருக்கிறது இந்த பெண்ணின் கதையும்!