ஓரின சேர்க்கையாளருடன் உங்கள் கணவர்: பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்பில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானுக்கு வந்த இரகசிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய்யுள்ளது.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தனது தன்பாலின ஈர்ப்பாளரான காதலருடன் தனிமையில் இருக்கிறார் என்பதே அந்த தொலைபேசி அழைப்பில் பிரிஜிட் மேக்ரானுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபல அரசியல் விமர்சகரான Nicolas Prisette தமது புதிய ஆவணப்படத்திலேயே பரபரப்பை கிளப்பியுள்ள இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
ஜனாதிபதி மேக்ரான் மற்றும் பிரிஜிட் தம்பதி தொடர்பில் அடுத்தடுத்து வெளியாகும் வந்தந்திகளின் தொடர்ச்சியாக தற்போது மேக்ரான் தொடர்பில் இந்த தகவலும் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, பிரிஜிட் மேக்ரான் பிறவியில் ஆண் எனவும், உரிய சிகிச்சை மூலம் பெண் என உருமாறியவர் எனவும் கூறப்பட்டு வருகிறது.
மேக்ரான் தொடர்பில் தமது தொலைபேசியில் வந்த அந்த இரகசிய அழைப்பால் பிரிஜிட் கலங்கிப்போனார் என Nicolas Prisette அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, தமது நெருங்கிய தோழிகளிடம் இது தொடர்பில் பகிர்ந்து கொண்ட பிரிஜிட், கவலையும் அதிர்ச்சியும் ஒருசேர என்னை விழுங்கியது என தமது தோழிகளிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
24 வயது வித்தியாசம் கொண்ட மேக்ரான் - பிரிஜிட் தம்பதியின் காதல் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதுவும் பிரிஜிட் அப்போது மூன்று பிள்ளைகளுக்கு தாயார்.
இவரிடம் மாணவராக பயின்றவர் தான் மேக்ரான். மேக்ரான் மீதான காதலால் பிரிஜிட் தமது கணவரை விவாகரத்து செய்து கொண்டார். தொடர்ந்து 2007ல் மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மேக்ரான் பிரிஜிட் தம்பதி திருமணம் செய்து கொண்டது.
Nicolas Prisette ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ள அந்த ஆண் தொடர்பில் விரிவான தகவல் இல்லை என்றாலும், அவ்வாறான ஒரு தொடர்பு மேக்ரான் இரகசியமாக வைத்துக்கொள்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், 2017ல் மேக்ரான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் பிரிஜிட் மேக்ரான் உடுத்தும் உடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.