பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ஆணாக பிறந்தவர் என சமூக ஊடகங்களில் உலவும் தகவல்... அவர் எடுத்துள்ள அதிரடி முடிவு
சமூக ஊடகங்களால் நன்மை இருக்கும் அளவுக்கு தீமையும் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு பக்கம் ஒருவருக்கு அவசரமாக இரத்தம் தேவை என்பது போன்ற செய்திகள் பரவி உதவி எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ, அதேபோல வதந்திகளைப் பரப்புவதிலும் சமூக ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளது.
அப்படி சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் பலர்.
அப்படி பாதிக்கப்பட்டவர்களில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானும் (68) ஒருவராகியுள்ளது அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது.
Faits et Documents என்ற வலது சாரி பத்திரிகையில், செப்டம்பர் மாதம் ஒரு செய்தி வெளியானது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவியும், பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரான் ஒரு ஆணாகப் பிறந்தவர் என்றும், அவரது உண்மையான பெயர் Jean-Michel Trogneux என்றும் கூறப்பட்டிருந்தது.
அந்த பத்திரிகையின் பத்திரிகையாளரான Natacha Rey என்பவர், தான் இந்த விடயம் குறித்து மூன்று ஆண்டுகள் விசாரித்து, பல நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு இந்த தகவலை வெளியிட்டதாக ஒரு பேட்டியளித்திருந்தார். டிசம்பர் 10ஆம் திகதி யூடியூபில் வெளியான அந்த வீடியோ நான்கே மணி நேரத்திற்குப் பின் நீக்கப்பட்டதாம். ஆனால், அதற்குள் அந்த வீடியோவை 470,000 பேர் பார்வையிட்டுள்ளார்கள்.
அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ட்விட்டரில் அந்த செய்தி பகிரப்பட்டு, கடந்த வாரம் #JeanMichelTrogneux என்ற ஹேஷ்டேகின் கீழ் பரவலாக உலாவந்துள்ளது, ரீட்வீட் செய்யப்பட்டும் உள்ளது.
இது தொடர்பாக, பிரிஜிட் மேக்ரான் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக Le Figaro என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிஜிட் மேக்ரான், இப்படிப்பட்ட சமூக ஊடக வதந்திகளில் சிக்கிய முதல் பிரபலம் அல்ல. ஏற்கனவே 2017ஆம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவைக் குறித்தும் இத்தகைய வதந்திகள் உலாவந்தது குறிப்பிடத்தக்கது.