2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ.2100-க்கு பொருள் கிடைக்கும்! டெல்லி கடைக்காரரின் வியாபார யுக்தி
2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வாங்கி வெளியிட்ட அறிவிப்பை, டெல்லி வியாபாரி ஒருவர் தன தொழிலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
2,000 ரூபாய் நோட்டு- RBI அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது, ஆனால் அவை தொடர்ந்து சட்டப்பூர்வமாக இருக்கும் என்று கூறியது.
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30-ம் திகதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வியாபாரத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நபர்
ரிசர்வ் வாங்கி வெளியிட்ட அறிவிப்பை, டெல்லி வியாபாரி ஒருவர் தனது வியாபாரத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். அவர் ஒரு தனித்துவமான வணிக யோசனையுடன் வந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், '2000 நோட்டைக் கொடுத்து, 2100 ரூபாய் மதிப்பிலான பொருட்களைப் பெறுங்கள்' என எழுதப்பட்டுள்ளது. கடையின் பெயர் கீழே 'சர்தார் எ பியூர் மீட் ஷாப், ஜிடிபி நகர்' என்று எழுதப்பட்டுள்ளது.
If you think RBI is smart, think again cos Delhites are much smarter.
— Sumit Agarwal ?? (@sumitagarwal_IN) May 22, 2023
What an innovative way to increase your sales! ?#2000Note pic.twitter.com/ALb2FNDJi0
அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சுமித் அகர்வால் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் இந்தப் பதிவில், 'ஆர்பிஐ புத்திசாலி என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் யோசியுங்கள் ஏனென்றால் டெல்லிவாசிகள் புத்திசாலிகள் அதைவிட புத்திசாலிகள். உங்கள் விற்பனையை அதிகரிக்க என்ன ஒரு புதுமையான வழி. என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு ட்விட்டரில் கிட்டத்தட்ட 1.8 லட்சம் பார்வைகளையும், 1700 லைக்குகளையும் பெற்றுள்ளன.
2000 Rs Note, Reseve bank of India, Rs.2000 Currency Note, Delhi