கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்
பலருக்கு பிடித்த காய்கறிகளில் கத்திரிக்காயும் ஒன்று.
கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மலச்சிக்கல்
நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
இதயம்
உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கதிர்கையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
சிறுநீரக கற்கள்
தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.
மூலம்
அதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடை குறைப்பு
கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.