Brinjal Tawa Fry: நாவூறும் சுவையில் கத்திரிக்காய் தவா வறுவல்: ரெசிபி இதோ
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த கத்திரிக்காய் தவா வறுவல்சாப்பிடவே சுவையாக இருக்கும்.
இந்த கத்திரிக்காய் தவா வறுவல் சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்து சாதத்திற்கும் சரியான சேர்க்கையாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான கத்திரிக்காய் தவா வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பெரிய கத்திரிக்காய்- 2
- சீரகம்- ½ ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ¾ ஸ்பூன்
- மிளகு- 12
- கார்ன் பிளார்- 1 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 3
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 5 பல்
- கருவேப்பிலை- சிறிதளவு
- சின்ன வெங்காயம்- 3
- எலுமிச்சை- ½
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் கத்திரிக்காயை சுத்தம் செய்து அதை வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, கார்ன் பிளவர், பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த கலவையில் பின் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு சிறிய பாத்திரத்தில் மாற்றி அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து, மசாலாவில் நறுக்கிய கத்திரிக்கையுடன் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் அப்படியே ஊறவைக்கவும்.
பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கத்திரிக்காயை பொறித்து எடுத்தால் சுவையான கத்திரிக்காய் தவா வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |