12 சிக்ஸர்களுடன் 57 பந்தில் 140 ரன்! அசுர ஆட்டம் ஆடிய வீரர் (வீடியோ)
பிக்பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் வீரர் ஜோஷ் பிரவுன், 57 பந்துகளில் 140 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
ஜோஷ் பிரவுன்
குயின்ஸ்லாந்தின் Carrara Oval மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் அணி, இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை (சார்லி வாக்கிம்) இழந்தது.
அதனைத் தொடர்ந்து கேப்டன் மெக்ஸ்வீனி, தொடக்க வீரர் ஜோஷ் பிரவுன் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மெக்ஸ்வீனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஜோஷ் பிரவுன் சிக்ஸர் மழை பொழிந்தார்.
Brown-town goes Downtown. That is massive! ?#BringTheHEAT #BBLFinals pic.twitter.com/h80BDnpXga
— Brisbane Heat (@HeatBBL) January 22, 2024
நாலாபுறமும் எதிரணி பந்துவீச்சை பறக்க விட்ட அவர், 41 பந்துகளில் சதம் விளாசினார். கேப்டன் மெக்ஸ்வீனி 33 (29) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
140 ஓட்டங்கள்
ஆனால், வேகத்தை குறைக்காமல் ஆடிய ஜோஷ் பிரவுன் 57 பந்துகளில் 140 ஓட்டங்கள் குவித்தார். இதில் 12 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.
பிரவுனின் அதிரடியால் பிரிஸ்பேன் ஹீட் 7 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. பெய்ன், லாய்டு மற்றும் போய்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, ஆடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19.5 ஓவரில் 160 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
? JOSH BROWN ?#BringTheHEAT #BBL13 pic.twitter.com/VHfvlSXOl3
— Brisbane Heat (@HeatBBL) January 22, 2024
அடிலெய்டு அணியில் அதிகபட்சமாக ஹரி நீல்ஸ்சன் 50 (33) ஓட்டங்களும், தாமஸ் கெல்லி 41 (24) ஓட்டங்களும் எடுத்தனர். பிரிஸ்பேன் அணியின் தரப்பில் கேப்டன் மெக்ஸ்வீனி மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |