கடைசி பந்துவரை திக் திக்! Brisbane Heat த்ரில் வெற்றி..தெறிக்கவிட்ட மெக்ஸ்வீனி (வீடியோ)
பிக்பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை வீழ்த்தியது.
ஓவர்டன் விளாசல்
காபாவில் நடந்த பிக்பாஷ் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் (Adelaide Strikers) அணிகள் மோதின.
அடிலெய்டு அணி முதலில் துடுப்பாடியது. டி ஆர்க்கி ஷார்ட் 1 ரன்னில் வெளியேற, அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கிறிஸ் லின் 24 (21) ஓட்டங்களும், ஓலி போப் 34 (29) ஓட்டங்களும், அலெக்ஸ் ரோஸ் 20 (15) ஓட்டங்களும் எடுத்தனர். அதிரடியில் மிரட்டிய பாஸ்லே 11 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ஓட்டங்கள் விளாசினார்.
James Bazley goes bang, bang!
— KFC Big Bash League (@BBL) December 22, 2024
The Strikers quick hits consecutive sixes against his former side. #BBL14 pic.twitter.com/rat2FHqBmW
ஜேமி ஓவர்டன் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் விளாச, அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 174 ஓட்டங்கள் குவித்தது. வில் ப்ரெஸ்ட்விட்ஜ் 2 விக்கெட்டுகளும், பார்ட்லெட், வால்டர் மற்றும் வைட்னே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ரென்ஷா 54
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பிரிஸ்பேன் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினர். அதன் பின்னர் கைகோர்த்த நாதன் மெக்ஸ்வீனி, மேட் ரென்ஷா கூட்டணி சிக்ஸர்களை பறக்கவிட்டது.
ரென்ஷா 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மெக்ஸ்வீனி வெற்றிக்காக போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பார்ட்லெட் அந்த ஓவரை வீசினார்.
த்ரில் வெற்றி
முதல் பந்து டாட் ஆக, அடுத்த பந்தில் லியாம் ஸ்காட் (3) அவுட் ஆனார். 3வது பந்தில் ஸ்வீப்ஸன் ஒரு ரன் எடுக்க, மெக்ஸ்வீனி 2 மற்றும் 1 ரன் எடுத்தார்.
இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அந்த பந்தை எதிர்கொண்ட ஸ்வீப்ஸன் 1 ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
HEAT WIN!
— KFC Big Bash League (@BBL) December 22, 2024
A thriller at The Gabba - with the Brisbane Heat claiming victory off the final ball! 😅 #BBL14 pic.twitter.com/HP3GDsYzwD
நாதன் மெக்ஸ்வீனி (Nathan McSweeney) 49 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் எடுத்தார். பிரிஸ்பேன் தரப்பில் ஹென்றி தோர்ன்டன், லாயிட் போப் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |